மதுரை பாலமேட்டில் பதற்றம்… தடையை மீறி அவிழ்த்து விடப்பட்ட காளைகள்…!! மாடுபிடி வீரர்கள் உற்சாகம்…!!

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
மதுரை பாலமேட்டில் பதற்றம்… தடையை மீறி அவிழ்த்து விடப்பட்ட காளைகள்…!! மாடுபிடி வீரர்கள் உற்சாகம்…!!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் இருந்து பாலமேடு நோக்கி  ஆயிரக்கணக்கானோர் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று சூளுரைத்து பாலமேட்டில் குவிந்துள்ளனர் இளைஞர்கள்.

இன்று அதிகாலையில் இருந்தே மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு காளைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாடிவாசல் அருகே போலீஸ் காவலையும் மீறி குவிந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

ஜல்லிக்கட்டுக்காக பாலமேட்டிற்கு காளைகளை கொண்டுவந்துள்ள 100க்கும் மேற்பட்டடோர் வாடிவாசலில் இருந்து தங்கஙள காளைகளை அவிழ்த்துவிட்டனர்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள மாடுபிடி வீரர்கள் காளைகயை விரட்டிச் சென்று அடக்கினர், இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் தடையை மீறியவர்களை போலீசார் விரட்டி விரட்டிச் சென்று கைது செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  பாலமேட்டில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் பொது மக்கள் கறுப்புச் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே வாடிசாசல் அருகே திரண்டிருந்த பொது மக்கள் மததிய அரசையும், பீட்ட அமைப்பையும் எதிர்த்து முழுக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தும் ஜல்லிகட்டு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளதால் அவர்களால் ஜல்லிக்கட்டு நடப்பதை தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

100 பேர் திரண்டால்தானே போலீசார் தடியடி நடத்துவார்கள்…லட்சக்கணக்கில் திரள்வோம் என வாட்ஸ்அப்பில் கொடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து லட்சியத்தை அடைய பாலமேட்டில்லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay...
இந்த தேர்தலில் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிடலாம் ..! அரியலூரில் சீறும் திருமாவளவன்!