
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு இன்று ஒப்புதல்?கையெழுத்திடுகிறார் பிரணாப் முகர்ஜி...
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அதை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அறவழிப் போராட்டத்தில் மிரண்டு போன மத்திய,மாநில அரசுகள் உடனடியாக தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் புதிய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரதுறை ஆகிய மூன்று துறைகளுக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை அனுப்பி வைத்தது.. அந்த மூன்று அமைச்சகங்களும் உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்கின.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் அதில் கையெழுத்திட்டு இன்று ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
.இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அந்த சட்டத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும், அந்த மசோதாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது.
அதை முறியடிக்கவே மத்திய அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் துரித நடவடிக்கை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு இருந்த அனைத்து தடைகளும் உடைக்கப்பட்டு விட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இந்த ஆண்டு நடைபெறுகிறது.
அரசியல்வாதிகளால் முடியாத இப்பிரச்சனையை இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் சாதித்திருக்கிறது.