கோவில் மரத்தடியில் இறந்து கிடந்த 80 வயது மூதாட்டி; எப்படி இறந்தார் என்று காவலாளர்கள் தீவிர விசாரணை…

 
Published : Jan 28, 2017, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
கோவில் மரத்தடியில் இறந்து கிடந்த 80 வயது மூதாட்டி; எப்படி இறந்தார் என்று காவலாளர்கள் தீவிர விசாரணை…

சுருக்கம்

திருச்செங்கோடு

நாமக்கல்லில் உள்ள கோவில் மரத்தடியில் 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்று காவலாளர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு நகர நெசவாளர் காலனி முனியப்பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் அரசமரத்தடியில் உள்ள மேடையில் நேற்று காலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திர்கு விரைந்து வந்த காவலாளர்கள் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள நகராட்சி மகப்பேறு நிலையத்திற்கு அந்த மூதாட்டி கைத்தடியுடன் சிகிச்சைக்கு வந்துள்ளார் என்பதும், பின்னர் சோர்வின் காரணமாக நடந்து வந்து மரத்தடி மேடையில் படுத்துள்ளார் என்பதை மட்டுமே காவலாளர்களால் கண்டுப்பிடிக்க முடிந்தது.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் போன்ற தகவல்கள் ஏதும் கண்டுப்பிடிக்க முடியாததால் தங்களது விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?