ஜெயலலிதா அம்மையாரை வைத்து அனுதாபம் தேடிக் கொள்கிறார் சசிகலா…ஐ.பெரியசாமி பதிலடி…

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 08:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
ஜெயலலிதா அம்மையாரை வைத்து அனுதாபம் தேடிக் கொள்கிறார் சசிகலா…ஐ.பெரியசாமி பதிலடி…

சுருக்கம்

ஜெயலலிதா அம்மையாரை வைத்து அனுதாபம் தேடிக் கொள்கிறார் சசிகலா…ஐ.பெரியசாமி பதிலடி…

ஜல்லிக்கட்டை பற்றி திமுக மீது குற்றம் சுமத்த சசிகலா நடராஜனுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் தன் தவறை மறைக்க ஜெயலலிதா அம்மையார் பெயரை சொல்லி அனுதாபம் தேடி, அவரை கொச்சைப்படுத்துகிறார் சசிகலா என்றும் ஐ.பெரியசாமி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக  துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி விடுத்துள்ள  அறிக்கையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டை அதிமுக ஆட்சியில் நடத்தினோம் என்று ஏதாவது வரிகள் இருக்குமா என்று சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தேடிப் பார்த்தேன். அப்படியொரு வரியை காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதிலிருந்தே “ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்புடன் நடத்த முடியாமல் அதிமுக ஆட்சி தோற்று விட்டது” என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்  அலங்காநல்லூரில் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்திற்கு வந்த கூட்டத்தையும், இளைஞர்களின் ஆரவாரத்தையும் பார்த்து அதிமுகவிற்கு “அலர்ஜி” ஏற்பட்டு, “பீதியில்” இந்த அறிக்கை  வெளிவந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

50 எம்.பி.க்களை வைத்திருக்கிறீர்களே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று தான் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் சசிகலா இப்படியொரு “வெத்து வேட்டு” அறிக்கை வெளியிடுகிறார் என்றும் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா இது போன்ற  அறிக்கைகளை விடும் முன்பு “கூகுளை” தேடிப் பார்க்க வேண்டாம். தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்ப்டட நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி ஓபிஎஸ்சிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். என்று குறிப்பிட்டுள்ள ஐ.பெரியசாமி, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக  எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டுக்கு 29.3.2006 அன்று முதலில் தடை விதித்தது. உடனடியாக போர்க்கால வேகத்தில் செயல்பட்ட திமுக அரசு தீவிர சட்ட நடவடிக்கையால் அதே மதுரை உயர்நீதிமன்றம் “ஜல்லிக்கட்டு விளையாட்டை முறைப்படுத்தி நடத்தலாம்” என்று 9.3.2007 அன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

அரசாங்கத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தொடர்புடைய கோப்புகளில் இது இருக்கும். இந்த விவரத்தை இல்லையென்று சசிகலாவால்  மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது,

திமுக அரசு தமிழகத்தின் பாரம்பரியத்தை, பாரம்பரிய கலாச்சாரத்தை எடுத்து வைத்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக ஆக்க பூர்வமாக வாதிட்டது. அந்த வாதத்தின் பலனாக, “காளைகளை பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தலாம்”  என்று 15.1.2008 அன்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 16 January 2026: தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்
சங்கே முழங்கு.. 2026-ல் பாருங்க! சங்கி குழுவுடன் தமிழ்நாடே இணையப் போகுது.. தமிழிசை சவால்!