தடையை மீறி ஜல்லிக்கட்டு - 15 பேர் கைது 

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தடையை மீறி ஜல்லிக்கட்டு - 15 பேர் கைது 

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உச்சநீதிமன்ற தடை உத்தவை மீறி, மதுரை விளாங்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அந்தந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தடையை மீறி இன்று காலை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.இதற்காக தற்காலிக இடத்தை அமைத்து, அங்கு காளைகளை அவிழ்த்துவிட்டுனர். அந்த காளைகளை, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான வாலிபர்கள், விரட்டி சென்று பிடித்தனர்.

தகவலறிந்து அஞ்கு சென்ற போலீசார், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 15 பேரை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Bhagyaraj: திருமணமான 2 ஆண்டுகளில் உயிரிழந்த பாக்யராஜின் முதல் மனைவி யார்? பலரும் அறியாத சோக கதை!