"இனியும் சஸ்பெண்ட் கூடாது" - ஏடிஜிபி ஜாபர்சேட்டுக்கு பணி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

First Published Jan 12, 2017, 2:36 PM IST
Highlights

ஏடிஜிபி ஜாபர்சேட்ட்டுக்கு இதுவரை வழங்கி வந்த சஸ்பெண்ட் உத்தரவை இனியும் நீட்டிக்க கூடாது அவருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீட்தி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு முறைகேடு   குற்றச்சாட்டுக்கு ஆளாகி  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னால் உளவு புரிவு ஜஜி ஜாபர் சேட்டுக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொய்யான தகவல்கள் கொடுத்து சில வீடுகளை பெற்று அவற்றை தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் வர்த்தக உபயோகத்திற்காக கட்டுடங்கள் கட்டியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில்   ஈடுபட்டதாக உளவு பிரிவு ஐஜி ஜாபர் சேட் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனையெடுத்து 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் அகதிகள் முகாமிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

பின்னர் ஜாபர் சேட்-டை காத்திருப்போர் பட்டியலில் சேர்ந்தும்,   ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு  அவரை பணியிடை நீக்கம் செய்து அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.மேலும்,அவரது பணியிடை நீக்கத்தை 6 மாதங்களுக்கு  ஒரு முறையான கடந்த 5 ஆண்டுகளாக நீட்டித்து வந்தது.

இதை எதிர்த்து ஜாபர் சேட் சார்பில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.இதை விசாரித்த நிர்வாக தீர்ப்பாயம் அவரை மீண்டும் பணியில் அமர்த்த தமிழக அரசிற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை  முடிவுற்ற நிலையில், நீதிபதிகள் சசீதரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  

அதில்,வரும் 17ம் தேதியுடன் அவரின் பணியிடை நீக்கம் காலம் முடிவடைகிறது. எனவே அவர் மீதான பணியிடை நீக்க உத்தரவை நீட்டிக்க கூடாது என தெரிவித்த நீதிபதிகள்

ஜாபர் சேட்-டை வரும் 18 ஆம் தேதிக்குள் மீண்டும் பணியில் அமர்த்த தமிழக அரசிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

click me!