'வரும் 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்' - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!!

 
Published : Aug 13, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
'வரும் 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்' - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!!

சுருக்கம்

jacto jio announces strike

அரசு ஊழியர் - ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வரும் 22 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.

தமிழக அரசு பங்களிப்பு ஒய்வூதிய திட்டத் ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவும், ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஊதிக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட என்பது உள்ளிட்டவைகளைக் குறித்தும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

வேலை நிறுத்தம் தொடர்பாக வரும் 16 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை நடத்தவும், அடையாள வேலை நிறுத்ததின்போது, அனைத்து தாலுக்காக்களிலும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!