Latest Videos

சென்னைக்கு வரப்போகும் ஜாக்பாட்.. எஸ்.ஜி.சூர்யாவின் கோரிக்கைக்கு செவி சாய்த்த மத்திய அமைச்சர்!

By vinoth kumarFirst Published Jun 13, 2024, 3:22 PM IST
Highlights

மத்திய அமைச்சர்களை தமிழகத்தைச் சேர்ந்த  பாஜக முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். 

நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 293 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.

இதையும் படிங்க: Annamalai : டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் ஸ்டாலின்-விளாசும் அண்ணாமலை

இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3வது முறையாக பதவியேற்றது. ஜூன் 10ம் தேதி பிரதமர் மோடியுடன் இணைந்து 30 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து பதவியேற்ற மத்திய அமைச்சர்களை தமிழகத்தைச் சேர்ந்த  பாஜக முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, மாநில வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

அந்த வகையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் அவர்களை தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் மெட்ரோ சிட்டியான சென்னையின் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் கூடுதல் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

இதையும் படிங்க: Minister Masthan: செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா? தப்புமா அமைச்சர் போஸ்ட்?

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்: புதிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் அவர்களை சந்தித்து சென்னை மாநகரின் வளர்ச்சி திட்டங்களின் பங்களிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடினேன். சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித்துறை வளர்ச்சிக்கு மத்திய மோடி அரசின் முழு பங்களிப்பு இருக்கும் என உறுதியளித்தார். விரைவில் நம் நகருக்கு தேவையான திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்து கோரிக்கைகளுடன் வருவதாக சொல்லி விடை பெற்றேன். இவருக்கு தமிழ் மொழி நன்கு பரிச்சயம் என்பதும், சரளமாக தமிழில் பேசக்கூடியவர் என்பதும் கூடுதல் தகவல் எனக் குறிப்பிட்டுள்ளார். 

click me!