இருக்குற பிரச்சனை போதாதுனு இது வேறயா? ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்து ஜி.கே.வாசன் கருத்து...

Asianet News Tamil  
Published : Nov 21, 2017, 08:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
இருக்குற பிரச்சனை போதாதுனு இது வேறயா? ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்து ஜி.கே.வாசன் கருத்து...

சுருக்கம்

Its not enough is not it GK Vasan commented on Governors research work ...

திருச்சி

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் வேளையில் தமிழக ஆளுநர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே. வாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் வருகிற 25-ஆம் தேதி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே. வாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வழிபாடு செய்து பந்தக்காலை நாட்டினார். இதனைத் தொடர்ந்து ஜி.கே. வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "திருச்சியில் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள த.மா.கா. பேரியக்கத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா மிகப்பெரிய எழுச்சி பொதுக் கூட்டமாக நடைபெறும். இதில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் நிர்வாகிகள், அனைத்து மாவட்ட மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்பார்கள்.

இந்தக் கூட்டத்தில் இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஜோதியை மேடையில் நான் பெற்றுக் கொள்வேன்.

தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளும் கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், தங்களது கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை. இவை எல்லாம் ஆளும் கட்சிக்கு பலவீனம்தான்.

ஆளுநருக்கான பொறுப்பு வரையறுக்கப்பட்டவை தான் என்றாலும் சில பணிகளைச் செய்ய தடை, தடங்கல் இல்லை. ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் இதனை தவிர்ப்பது நல்லது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனைத் தனித்து சந்திக்க த.மா.கா. தயாராக இருக்கிறது. அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அப்போதைய அரசியல் சூழ்நிலையில் மக்களின், தொண்டர் களின் மனநிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.

த.மா.கா. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி ஏற்படுத்தும் என கற்பனை செய்திகளை பரவ விடுவது அவதூறு பிரசாரம் ஆகும்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல் (மாநகர்), குணா (தெற்கு), ரவீந்திரன் (வடக்கு), விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !