விஜயகாந்த் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் ஆளுநர், முதல்வர்.? வேறு முக்கிய தலைவர்கள் யார்.? யார்.?

By Ajmal Khan  |  First Published Dec 29, 2023, 12:52 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையோடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட நபர்கள் கொள்ள இருப்பாக தகவல் வெளியாகியுள்ளது.


விஜயகாந்த் உடலுக்கு மரியாதை

திரைத்துறை மற்றும் அரசியலில் கலக்கிய விஜயகாந்த் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களாக மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்த போதும் நுரையீரலில் அதிகளவு சளி பரவியதால் நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்திபொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்தது. தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், 

Tap to resize

Latest Videos

இறுதி சடங்கில் பங்கேற்கும் தலைவர்கள்

தற்போது சென்னை தீவு திடலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதியம் 1 மணியளவில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதனையடுத்து மாலை 4.45 மணி அளவில் அரசு மரியாதையோடு இறுதி சடங்கு நடைபெறுகிறது. இந்தநிலையில் இறுதி சடங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  அதிமுக கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையொட்டி தேமுதிக அலுவலகத்தில் நடைபெறவுள்ள இறுதி சடங்கில் 500 பேர் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலை அடக்கம்; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம்!!

click me!