சிஎஸ்கே போட்டியை பார்க்க போறீங்களா.? மெட்ரோ டிக்கெட்டை முன்கூட்டியே வாங்கிடுங்க-அலர்ட் செய்யும் மெட்ரோ ரயில்

By Ajmal KhanFirst Published Mar 26, 2024, 8:44 AM IST
Highlights

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்மான சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்க்க ஏராளாமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால் இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐபிஎல் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ரசிகர்களுக்காக நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளதாகவும், பயண சீட்டு முட்கூட்டியே பெறுவதற்கான வழிமுறையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி, சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். மேலும், போட்டிக்குப் பிறகு, அரசினர் தோட்டம் /புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில்,

நள்ளிரவு வரை ரயில்கள் இயக்கம்

கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc ) பயணச்சீட்டை பெறலாம் அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம். மேலும், பயணிகளின் வசதிக்காக

அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50/ செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம்.  இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து மட்டும் இரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்து கொள்கிறது. மேலும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு இரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

Virat Kohli Orange Cap: முதல் முறையாக இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற கோலி!

click me!