ரெய்டு நடத்த இந்த கோலத்திலா  போவது ? அப்படியே ஷாக் ஆகிட்டாங்கலாம்...

 
Published : Nov 09, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ரெய்டு நடத்த இந்த கோலத்திலா  போவது ? அப்படியே ஷாக் ஆகிட்டாங்கலாம்...

சுருக்கம்

is this right way to go for raide

ரெய்டு நடத்த இந்த கோலத்திலா  போவது ? 

சசிகலா மற்றும்  தினகரனுக்கு சொந்தமான பல  நிறுவனங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் இன்று  காலை முதல் வருமானவரித்துறையினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

சசிகலாவின் உறவினர்கள் இல்லங்களில் நடைபெறும் சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறையினர் வாடகை கார்களில் சென்றுள்ளனர்.

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிட்டத்தட்ட 160 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறையினர், வாடகை கார்களில் சென்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு செல்வது போன்ற ஸ்டிக்கர் ஓட்டிய கார்களில் அதிகாரிகள் சோதனைக்காக சென்றுள்ளனர்.

SRINI weds MAHI  என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு சென்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்

இதற்காக ஏற்கனவே அவர்கள் வாடகை டாக்சிக்களையும் முன்பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

160-க்கும் அதிகமான இடங்களுக்கும் திருமணத்திற்கு செல்வது போன்று ஸ்டிக்கர் ஒட்டிய வாடகை கார்களிலேயே சென்று அவர்கள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.

இதுவரை  நடந்த  ரெய்டுகளில் இது ஒரு வித்தியாசமான  முறையில் தான்  நடந்துள்ளது  என்று கூறலாம்......

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு