
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேரை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார். டி.என்.பி.எல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அமரேஷ் புஜாரியும், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயாள், சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் இணை ஆணையராக தர்மராஜன், மதுரை தெற்கு போலீஸ் துணை ஆணையராக பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.,யாக பிரமோத் குமார், கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி பிரிவு கண்காணிப்பாளராக சந்திரசேகரன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக தமிழ்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல்: தமிழக அரசுக்கு மத்திய குழு தலைவர் பாராட்டு!
அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக ஆனாமிகா, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக ஐஸ்வர்யா உள்ளிட்ட 15 பேர் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.