புதுக்கோட்டை, மணமேல்குடி அரசுப்பள்ளியில் கணினி மற்றும் ஆவணங்களை சேதப்படுத்திய இடைநிலை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தைலம்மை என்பவர் இடைநிலை ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிக்கு சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவருக்கு பல முறை எச்சரித்தும் பணிக்கு முறையாக வரவில்லை. இதனால், தைலம்மையின் சம்பளத்தை நிறுத்திவைத்து வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.
undefined
இதனால் ஆத்திரமடைந்த தைலம்மை தனது சம்பளத்தை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் பள்ளி மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள கணினி, லேப்டாப் மற்றும் ஆவணங்களை சேதப்படுத்தியும், கிளித்தெறிந்தும் அடவாடியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், ஆசிரியை கணினி உள்ளிட்டவற்றை உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியை தைலம்மையை நேற்று பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.