ஏமாற்றிய காப்பீடு நிறுவனம்; பணம் கொடுத்தவர்களுக்கு என்ன சொல்வதென்று பயந்து பிள்ளைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை...

 
Published : Nov 21, 2017, 06:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஏமாற்றிய காப்பீடு நிறுவனம்; பணம் கொடுத்தவர்களுக்கு என்ன சொல்வதென்று பயந்து பிள்ளைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை...

சுருக்கம்

insurance company Cheated Mother son and daughter suicide

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பணம் வாங்கிக் கொண்டு காப்பீட்டு நிறுவனத்தினர் தலைமறைவாகி ஏமாற்றியதால் தன்னை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு என்ன சொல்வதென்று பயந்து பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்தார். இதில், மகன், மகள் உயிரிழந்தனர். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாத்துகுடி ஊராட்சி, வளர்த்தாமங்கலம் கிராமம், காலனி தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (45). இவர், வடக்குமாங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சமையல் உதவியாளராகவும், தனியார் காப்பீட்டு நிறுவன முகவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு கௌதமன் (29) என்ற மகனும், ரமணா (25) என்ற மகளும் இருந்தனர்.

இதில் கெளதமன் எம்.பி.ஏ. படித்துவிட்டு கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் வங்கியில் வாகனக் கடன் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார்.

கலைச்செல்வி அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு காப்பீடு செய்து அதற்குரிய பிரீமியத் தொகையை வசூல் செய்து, காப்பீட்டு நிறுவனத்தில் கட்டியுள்ளார். இதில், பாலிசி முதிர்வடைந்தவர்களுக்கு முதிர்வுத் தொகையை பெற்றுத்தர தனியார் காப்பீட்டு நிறுவனத்தை அணுகினார் கலைச்செல்வி.

அப்போதுதான், காப்பீட்டு நிறுவனர்கள் தலைமறைவானது தெரியவந்ததால் பிரீமியம் செலுத்தியவர்கள் தங்களுக்குரிய பணத்தைத் தருமாறு கலைச்செல்வியை நிர்பந்தித்து உள்ளனர்.  நெருக்கடிக்கு ஆளான கலைச்செல்வி தன்னை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தார்.

இந்த நிலையில் கலைச்செல்வி, தனது மகன், மகளுடன் கடந்த 14-ஆம் தேதி வீட்டிலிருந்த கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், ரமணா கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், கெளதமன் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று உயிரிழந்தார்.

கலைச்செல்வி தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்