“இன்ஸ்பெக்டர் கொடுத்த பளார்...!!!” – காவலர் மயக்கம்..!!

Asianet News Tamil  
Published : Nov 07, 2016, 02:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
“இன்ஸ்பெக்டர் கொடுத்த பளார்...!!!” – காவலர் மயக்கம்..!!

சுருக்கம்

காஞ்சிபுரத்தில் அணிவகுப்பிற்கு தாமதமாக வந்த காவலர் மீது ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதால் காவலர் வேல்முருகன் மயக்கமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் ஆய்வாளராக உள்ளவர் லோகநாதன். இதில் முதல் நிலை காவலர் உள்ளவர் வேல்முருகன். இன்று காலை ஆயுதப்படை பிரிவினருக்கான அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, முதல் நிலை காவலர் வேல்முருகன் சற்று தாமதமாக அணிவகுப்புக்கு வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆய்வாளர் லோகநாதன் எதுவும் விசாரிக்காமல் காவலர் வேல்முருகன் கன்னத்தில் பளார் என்று அரை விட்டுள்ளார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்தான் வேல்முருகன் தாமதாமாக வந்துள்ளார்.  இதை அறியாமல் ஆய்வாளர் அவரை அறைந்ததால், வேல்முருகன் மயக்கமடைந்துள்ளார்.

உடனே அருகிலிருந்த மற்ற காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் தாக்குதல் நடத்திய ஆய்வாளர் மீது குற்ற மற்றும் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இனி 'இந்த' இருமல் மருந்து கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி தடை.. பின்னணியில் பகீர் காரணம்!
தவெக Vs திமுக.. யாருடன் கூட்டணி? கையை தூக்குங்க! கடுப்பான தலைகள்.. என்ன நடந்தது?