உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்…

Asianet News Tamil  
Published : Jan 10, 2017, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்…

சுருக்கம்

சிதம்பரத்தில், உடலில் அதிக காயங்களுடன், இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டைக் கடற்கரையில், திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. ஒன்றரை டன் எடையும், 7 அடி நீளமும், 2 அடி உயரமும் கொண்ட திமிங்கலத்தின் உடலைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

கடலூர் வனத் துறையினர் திமிங்கலத்தைக் கைப்பற்றி, புவனகிரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமிங்கலம் உயிரிழப்புக்கான காரணம் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதகுறித்து அப்பகுதி மீனவர்கள் தெரிவித்ததாவது: “இறந்த இந்த திமிங்கலம் உடலில் காயங்கள் அதிகம் இருப்பதால் படகுகளில அடிப்பட்டு  இறந்திருக்கலாம்” எனத் தெரிவித்தனர்

PREV
click me!

Recommended Stories

ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்
ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி