இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை இடங்களில் வேற்றி பெறும் என்று அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படி திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நான் பணம் வழங்கியதாக நிரூபித்தால் அந்த நிமிடமே அரசியலைவிட்டு விலகுகிறேன் - அண்ணாமலை அதிரடி
undefined
வாக்களித்த பின் அமைச்சர் கே.என் நேரு கூறுகையில், யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டு உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள். அவ்வாறெல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.
கடந்த 3 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்கு பதிவானது தெரியுமா?
தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான். பாஜக டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.