G Square : ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?

Published : Apr 25, 2023, 08:21 AM IST
G Square : ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை..! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?

சுருக்கம்

பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்க்கும் வகையில் பெங்களூரில் இருந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ஆடிட்டர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  

ஜி ஸ்கொயர் - ஐடி சோதனை

தென் மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிகாலையில் தொடங்கி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனம் 2012 ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை, கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் இதனுடைய கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கியது முதல் ஆண்டுக்கு 56 கோடி ரூபாய் வருமான ஈட்டி வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது அதன் ஆண்டு வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. 

ஜி ஸ்கொயர் திமுக முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதா.? ஆதாரங்களோடு அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிறுனவம்

இரண்டாம் நாளாக சோதனை

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெறும்  சோதனையில் தமிழக காவல்துறையை முழுமையாக பயன்படுத்தாமல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை வருமான வரித்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இதே போல ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ள கார்திக் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்திக் தந்தை திமுக அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ மோகன் ஆவார். இவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுபில் இருக்கும், சுதிர், பிரவின்,பாலா, ஆதவ் அர்ஜூன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மகன் மோகன் கார்த்திக் உள்ளிட்ட 19 நிறுவனங்கள், வீடுகளில் சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. 

பயப்படுவதற்கு எதுவும் இல்லை

இதனிடையை ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் சோதனை முடிவுக்கு கொண்டுவரும் என்று நம்புகிறோம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஜெயக்குமார் ஒரு லூசு.. என்னை பார்த்து இப்படி சொல்றாரு.. எடப்பாடியும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? ஓபிஎஸ் ஆவேசம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!