
சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் மற்றும் பண்ணை வீடுகளில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
வருமான வரி அதிகாரிகள் 6 பேர் தலைமையில், 1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் 190 இடங்களில் வருமானவரி ரெய்டு நடப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
சோதனைக்காக பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு முன்னதாக நடந்த ரெய்டுகளில் இது போன்ற ஒரு சோதனை நடைப்பெற்றதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
சிறப்பம்சங்கள்
200 வாடகை கார்கள்
ஸ்டிக்கர் : srini weds mahi
லொகேஷன் மற்றும் பிரிவை தெரிந்துகொள்ள வண்டி எண் குறிக்கப்பட்டு உள்ளது. உதாரணம் : H-12
190 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை
ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான ஸ்டிக்கரை பயன்படுத்தி 190 இடங்களில் வருமானவரி சோதனை நடந்திருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.