
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
கடந்த 2016 ஆம் ஆண்டில், நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது
அப்போது சில முக்கிய ஆவணங்களை கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேதா இல்லத்தில் இரண்டு முக்கிய அறைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது.
அந்த அறையில் மேலும் சில முக்கிய ஆவணங்களை கண்டெடுக்கப்பட்டு உள்ளதால், அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5 பேர் கொண்ட குழுவை அமைத்து, சீல் வைக்கப்பட்ட அந்த இரண்டு அறைகளில் மட்டும் ஒன்றரை மணி நேரமாக சோதனை நடைபெற்று வருகிறது
தற்போது சீல் வைக்கப்பட்ட இரண்டு அறைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது
அதே வேளையில்,ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அறைக்கு எதிராக உள்ள, சசிகலா தரப்பினர் பயன்படுத்தும் கட்டிடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.