சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சுவரை ஓட்டை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் - 2 லாக்கர்கள் உடைத்து பணம் கொள்ளை..!

First Published Mar 26, 2018, 12:26 PM IST
Highlights
In the Indian Overseas bank in Chennai the mysterious persons entered the wall 2 lockers broke money


சென்னையில் விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு ரூ. 32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான குற்றவியல் நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கொலை சம்பவங்களும் கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு திறக்கும் வங்கி மாலை 6 மணிக்கு மூடப்படும். இதற்கு காவலாக வேறு மாநிலத்தை சேர்ந்த காவலாளி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று மாலை வழக்கம்போல் வங்கி பூட்டப்பட்டு விட்டது. இன்று காலை வங்கி அதிகாரிகள் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வங்கியின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவையும் சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக அந்த வங்கியில் வேலை பார்க்கும் ஹவுஸ் கீபிங் வேலையாட்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என வலுத்த சந்தேகம் எழுந்துள்ளது. ஹவுஸ் கீபிங் வேலையாட்களின் அறை அருகே தான் கேஷ் லாக்கா் வைக்கப்பட்டிருக்கும் அறைகளும் உள்ளன. அதில் ஒருவா் கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது

click me!