
காஞ்சிபுரம்
பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானதில் காஞ்சிபுரத்தில் மாணவர்கள் 66.67 சதவீதமும், மாணவிகள் 84.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 350 பள்ளிகள் உள்ளன. அதில் மொத்தம் 111 அரசு பள்ளிகள் உள்ளன. 22 ஆயிரத்து 220 மாணவர்கள், 25 ஆயிரத்து 241 மாணவிகள் என்று மொத்தம் 47 ஆயிரத்து 461 மாணவ – மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள்.
அவர்களில் 18 ஆயிரத்து 362 மாணவர்கள், 23 ஆயிரத்து 027 மாணவிகள் என்று மொத்தம் 41 ஆயிரத்து 389 மாணவ – மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்ச்சி 87.21 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.
அரசு பள்ளி மாணவர்கள் மொத்தம் 19 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 66.67 சதவீதமும், மாணவிகள் 84.31 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.