விபத்தில் கை, கால் துண்டாகி மாட்டு வியாபாரி பலி…

First Published Jan 9, 2017, 9:40 AM IST
Highlights


கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோவில் பயணம் செய்த மாட்டு வியாபாரி கை, கால் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கறம்பக்குடியில் இருந்து வேலாடிப்பட்டியை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டு இருந்தது. தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்தது. இரண்டு வாகனங்களும் பிலாவிடுதி விலக்குச் சாலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரி மணியன் (60) என்பவர் கை, கால் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோவில் பயணம் செய்த சுக்கிரன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் (60), மஞ்சுவிடுதியைச் சேர்ந்த அருணகிரி (35), வெள்ளாவிடுதியைச் சேர்ந்த சின்னத்துரை (17), கறம்பக்குடி அக்ரகாரத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (60), சிவன்கோவிலைச் சேர்ந்த வீரம்மாள் (50), ஆட்டோ டிரைவர் முனியாண்டி (25) ஆகிய ஆறு பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதைக்கண்ட அந்த வழியாகச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து கறம்பக்குடி காவலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான காவலாளர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

விபத்தில் இறந்த மாட்டு வியாபாரி மணியனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கறம்பக்குடி காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் சூரக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (30) என்பவரை கைது செய்தது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.  

click me!