அலர்ட்..! 8 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ரிசல்ட்..வரும் பிப்.,1 ஆம் தேதி வெளியீடு..

By Thanalakshmi VFirst Published Jan 29, 2022, 6:15 PM IST
Highlights

பிப்ரவரி 1 ஆம் தேதி 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற தனி தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன. 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக கொரோனா தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே போல், அனைத்து மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்கிறது. மேலும் அனைத்து தனியார் மற்றும் அரசு பல்கலைகழகங்கள், கல்லூரிகள், தொழில் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இல்லம் தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும், இதன் மூலம் மாணவர்களின் கற்றல் இடைவெளி குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளதால், நிச்சயமாக, பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேர்வு குறித்த அறிவிப்பு வின்னர் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்பிற்கும் நேரடி வகுப்பு தொடங்கவிருக்கும் நிலையில் விரைவில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!