முக்கிய அறிவிப்பு.. இ- சேவை மையத்தில் டிசி, மார்க் ஷீட் பெறலாம்..பள்ளிகல்வித்துறை உத்தரவு..

By Thanalakshmi VFirst Published Jan 29, 2022, 4:34 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் உள்ளிடவற்றை பெறலாம் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
 

தமிழகத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் உள்ளிடவற்றை பெறலாம் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுபாடுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த 6 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் சில ஊரடங்கு கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பு 28,515 ஆக இருந்த நிலையில் நேற்று கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,982 குறைந்து 28,533 ஆக பதிவாகியுள்ளது. 1,45,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 26,533 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஏற்கனவே விதிக்கப்பட்ட  கட்டுபாடுகளிலிருந்து பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.பிப்ரவரி 1 முதல் 1- 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து தனியார் மற்றும் அரசு பல்கலைகழகங்கள், கல்லூரிகள் பிப்.,1 ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் இ -சேவை மையங்கள் வாயிலாக மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட 23 ஆவணங்களை பொதுமக்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. தழிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் உள்ளிட்ட 23 ஆவணங்களை இ- சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் சான்றிதழ்களை பெறுவதற்கு உதவியாக காணப்படுவது இ-சேவை மையங்கள் தான். இந்த இ-சேவை மையங்கள் மூலமாக பட்டா, சிட்டா சான்றுகள், உள்ளிட்ட பல சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் திருத்தம் போன்ற சேவைகளையும் பெற்று தர முடியும் குறிப்பிடத்தக்கது.

click me!