காட்டுப்பகுதியில் கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்தது என்ன?

Published : Jul 23, 2025, 01:10 PM IST
illegal love

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கள்ளக்காதல் ஜோடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சு மலை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி நாகம்மா. இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நாகம்மா வேலைக்கு சென்ற இடத்தில் தொட்டூரை சேர்ந்தவர் மாதேஷ் (35) என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனிமையில் அவ்வப்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாளடைவில் மாதப்பனுக்கு தெரிய வந்தது மட்டுமல்லாமல் நேரில் பார்த்துள்ளார். இதுதொடர்பாக மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கடந்த மாதம் 30ம் தேதி கோபித்துக்கொண்டு நாகம்மா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கிருந்து அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதே நாளில் வெளியே சென்ற மாதேஷ் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது தொட்டமஞ்சு அருகே பெல்லட்டி வனப்பகுதியில் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அழுகிய நிலையில் மாதேஷின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்தத சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் 100 மீட்டர் தூரத்தில் அழுகிய நிலையில் நாகம்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் இருவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!