பன்றி காய்ச்சல் அறிகுறியா ? பயப்பட வேண்டாம் .....

 
Published : Feb 22, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
பன்றி காய்ச்சல்  அறிகுறியா ?  பயப்பட  வேண்டாம் .....

சுருக்கம்

தமிழகம்   முழுவதும் பன்றி காய்ச்சல்  பரவி வருவதால், காய்ச்சல்  அறிகுறி தெரிந்தாலே , அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது என சுகாதாரத்துறை செயலர் இராதாக்கிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ராதக் கிருஷ்ணன், பன்றி காய்ச்சலுக்கான போதிய மருந்து  அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும்  யாரும் பயப்பட  வேண்டாம் என  குறிபிட்டுள்ளார் .  மேலும் தற்போது ஆங்காங்கு  மக்களிடையே பன்றி காய்ச்சல்  குறித்த  விழிப்புணர்வை  ஏற்படுத்தி  வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக  சுகாதாரத்துறை  அமைச்சர்  விஜய பாஸ்கர், தமிழகத்தில் இதுவரை 15௦௦  பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை  பெற்றதாகவும்  தெரிவித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.   

எனவே , யாருக்காவது  பன்றி  காய்ச்சல் அறிகுறி தெரிந்தால்,  மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை  செய்து, அதற்காக வழங்கப்படும்  டாமிஃப்ளு மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு  சுகாதாரத்துறை  செயலர்   இராதாக்கிருஷ்ணன்  தெரிவித்துள்ளார் . 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!