தொழில் அதிபர் 'இதயம்' வி.ஆர்.முத்து காலமானார்.. சோகத்தில் மூழ்கிய விருதுநகர்!

Published : Mar 04, 2026, 08:11 PM IST
Idhayam Oil Founder VR Muthu

சுருக்கம்

தொழில் அதிபரும், இதயம் எண்ணெய் குழும தலைவருமான வி.ஆர்.முத்து காலமானார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபலமான இதயம் எண்ணெய் நிறுவனத்தின் தலைவரும், தொழில் அதிபருமான வி. ஆர்.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 4) காலமானார். இவருக்கு வயது 72. இது தொடர்பாக இதயம் மந்த்ரா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''எங்கள் அன்பான தலைவர் வி. ஆர். முத்து ஐயா காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அவரது தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும். ஓம் சாந்தி'' என்று கூறப்பட்டுள்ளது.

யார் இந்த வி.ஆர்.முத்து

அக்டோபர் 6, 1953 அன்று விருதுநகரில் பிறந்த வி.ஆர்.முத்து, இன்று இதயம் எண்னெய் என்ற பிராண்ட் உலகளவில் பிரபலம் அடைவதற்கு முக்கிய முக்கிய காரணமாக இருந்துள்ளார். லூஸ் எண்ணெயாக விற்கப்பட்டு வந்த நல்லெண்ணெயை 1986-ஆம் ஆண்டு தனது தந்தையுடன் இணைந்து இதயம் நல்லெண்ணெய் பிராண்டைத் தொடங்கினார். மேலும் இவரது தலைமையில் இதயம் குழுமம் நல்லெண்ணெய் மட்டுமின்றி 'மந்த்ரா' கடலை எண்ணெய் மற்றும் பிற சமையல் எண்ணெய் வகைகளையும் அறிமுகப்படுத்தி, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்தது.

சோகத்தில் மூழ்கிய விருதுநகர்

தொழில் அதிபர் என்பதையும் தாண்டி ரோட்டரி சங்கத்தின் ஆளுநராகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் அறங்காவலராகவும் இருந்து பல சமூகப் பணிகளைச் செய்துள்ளார் இதயம் வி.ஆர்.முத்து. இவரது மறைவு விருதுநகர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதயம் வி.ஆர்.முத்து மறைவுக்கு பலவேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் இரங்கல்

தமிழக அமைச்ச தங்கம் தென்னரசு வி.ஆர். முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரும், இதயம் குழுமத்தின் தலைவரும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான திரு.வி.ஆர். முத்து அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுகவில் உள்ள 80% தொண்டர்கள் திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது ! ஓபிஎஸ் பேட்டி
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.! இதை செய்தால் மட்டுமே PM கிசான் ரூ.6,000.. ஆட்சியர் அதிரடி