எடப்பாடியை நீக்கும் அதிகாரம் கூட எனக்கு உண்டு... அசால்டாக பேசும் டிடிவி...

First Published Aug 10, 2017, 3:33 PM IST
Highlights
I also have the power to remove ttv dinakaran


சசிகலா நியமனம் செய்தது நியாயமானது என்றால், அவர் அறிவித்த ஆணைகளும் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நீக்கும் அதிகாரம் கூட எனக்கு உண்டு என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமை அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் பொதுச் செயலாளராக உள்ள சசிக்கல் மற்றும் துணைப்பொதுசெயலாளராக உள்ள டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். 

துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றுள்ளார் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் டிடிவி தினகரனை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி அணியின் இந்த அறிவிப்பால், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டிடிவி தினகரன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி எப்போது தேர்தல் ஆணைய தலைவராக ஆனார் என்று கேள்வி எப்ப்பினார். சசிகலா தயவால் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி.

நான் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதால் அவர்களுக்கு பயம் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்.

சசிகலாவை நியமனம் செய்தது நியாயமானது என்றால், அவர் அறிவித்த ஆணைகளும் செல்லும். துணை பொது செயலாளராக நான் செயல்பட எந்த தடையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணைய உத்தரவை மீறியுள்ளார்.

என்னை நீக்கப்பட்டது குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை பதவி காலியாகிவிடும். அதிமுகவின் விதிகளை திரித்து கூறுகிறார்கள், பொது செயலாள நியமித்த அனைத்து பதவிகளும் செல்லும். 

திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொருளாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டவர். எனக்குள்ள அதிகாரத்தின்படி கட்சி பதவியில் பலரை நியமித்துள்ளேன். கட்சி வளர்ச்சிக்கு தேவையான எல்லா நடவடிக்கையும் எடுப்பேன் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்து அதிமுகாவை காப்பாற்றுவேன் என்று டிடிவி தினகரன் கூறினார்.

click me!