மனைவியின் கள்ளக்காதலனிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த கணவன்... பணம் தருவதாக கூறி வரவழித்து கொலை

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 11:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
மனைவியின் கள்ளக்காதலனிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த கணவன்... பணம் தருவதாக கூறி வரவழித்து கொலை

சுருக்கம்

Husbands wife is a troubled husband

பொம்மிடி அருகே, லாரி டிரைவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மனைவியின் கள்ளக்காதலனும், அவருடைய மைத்துனரும் சேர்ந்து தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பால்காரனூரை சேர்ந்த வீராசாமி மகன் மோகன். லாரி டிரைவரான இவர், கடந்த மாதம் 25ம் தேதி, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், உடல் முழுவதும் பயங்கர வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இது குறித்து போலீசார் கூறியதாவது; தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மலர்க்காடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மாரிமுத்து.

அம்பிகாவின் உறவினரான இவர், அடிக்கடி நல்லம்பள்ளிக்கு வந்து சென்றபோது அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம், அம்பிகாவின் கணவர் மோகனுக்கு தெரியவந்தது.

ஆனால், மாரிமுத்து வசதியாக இருந்ததால், இதை கண்டு கொள்ளாத கணவர் மோகன், அடிக்கடி அவரிடம் பணம் வாங்கித்தரச் சொல்லி வாங்கியுள்ளார். இதற்கு அம்பிகாவும் உடந்தையாக இருந்துள்ளார். மாரிமுத்துவிடம் ரூ.5 லட்சம் வாங்கிய நிலையில், வீட்டில் தறி போட வேண்டும் என கூறி, மேலும் ரூ.1 லட்சம் கேட்டுள்ளனர்.

இவர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுப்பது குறித்து, தனது மைத்துனர் பூபதியிடம் மாரிமுத்து முறையிட்டுள்ளார்.
இதனால், ஆவேசமடைந்த பூபதி கொடுத்த ஆலோசனையின்படி, மாரிமுத்து பணம் தருவதாக கூறி, மோகனை நல்லம்பள்ளிக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு பூபதி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, மோகனை கடத்திச் சென்று கொலை செய்து, சடலத்தை வீசி விட்டுச் சென்றுள்ளனர். அம்பிகாவிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கொலையாளிகள் பற்றிய விவரம் தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து, மாரிமுத்து, பூபதி ஆகியோரை கைது செய்த போலீசார், பெங்களூருவுக்கு தப்பியோடி விட்ட அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை