விசாரணையில் திடுக் தகவல்! கணவன் திட்டியதால் நொந்துப்போன கள்ளக் காதலி விபரீதம்... கள்ளக்காதலன் விபரீத செயல்!

 
Published : Jul 19, 2018, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
விசாரணையில் திடுக் தகவல்! கணவன் திட்டியதால் நொந்துப்போன கள்ளக் காதலி விபரீதம்... கள்ளக்காதலன் விபரீத செயல்!

சுருக்கம்

husband strict wife and boyfriend suicide

கள்ளக் காதலிலை அவரது கணவன் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே கன்டிகைப்பேரியை சேர்ந்த முருகராஜ் என்பவர் தூத்துக்குடி, புதியம்புத்தூரில் தங்கி அங்குள்ள காற்றாலை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவர், வேப்பமரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியானது. 

விசாரணையில், கன்டிகைப்பேரியில் உள்ள செங்கல் சூளையில் நெல்லை  சுரண்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும், முருகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியதால் அவர்களுக்கு இடையே படுக்கைக்கு போகும் அளவிற்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

இருவரும் ரகசியமாக சந்தித்து கள்ளக்காதலை வளர்ந்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் அடிக்கடி செங்கல் சூளை அருகே சந்தித்து வந்த  விஷயம் செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்கள் மூலம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால் மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கணவரின் பேச்சை  கேட்க்காத  மனைவி  கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.  இதனையடுத்து அந்த பெண்ணும் முருகராஜும் அடிக்கடி செல்போனில் ரொமான்ஸ் செய்துள்ளனர் வந்தனர். 

இந்த விவரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர், மீண்டும் மனைவியை கண்டித்தார். தனது கள்ளக்காதலனுடன் பேச முடியவில்லையே என்று மனம் உடைந்த அந்த பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்பெண் தற்கொலை செய்து கொண்ட விஷயம் அறிந்த   முருகராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் முருகராஜும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவரம் போலீசார் விசாரணையில் வெளியானது. முருகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 25 December 2025: கிறிஸ்துமஸ் நாள்.. விழாக்கோலம் பூண்ட தேவாலயங்கள்..!
நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு