
தகாத உறவை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தனது சொந்த மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கொடூர சம்பவம் அரியலூரில் அரங்கேறி உள்ளது
அரியலூரில் அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ராஜி. இவருக்கு வயதோ 25. ஆனால் 32 வயதான அனிதா என்ற பெண் ஒருவருடன் கள்ளக்காதல் வைத்துள்ளார்.
அனிதாவிற்கு 16 வயதுடைய மகள் உள்ளார். ராஜுவிற்கு வேறு யாருடனாவது திருமணம் நடந்துவிட்டால், கள்ளக்காதலை தக்க வைத்து கொள்ள என்பதற்காக, தன் சொந்த மகளை கட்டாயப்படுத்தி கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜுவுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார் சத்யா.
இந்நிலையில் சத்யாவிற்கும் ராஜுவுக்கும் தகாத உறவு உள்ளது என்பதை நேரில் பார்த்த சத்யா ராஜுவை தஞ்சாவூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்
இந்நிலையில், குழந்தையை பார்த்துக் கொள்ள சத்யாவை வீட்டிற்கு அழைத்துவா என தன் மனைவியிடம் தெரிவித்து உள்ளார் ராஜு.
இதற்கு மனைவி மறுப்பு தெரிவிக்கவே, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
பின்னர் அடித்து உதைத்து கொலை மிரட்டலும் கொடுத்து உள்ளார்.
இதனை சுதாரித்து கொண்ட மனைவி தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி, பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், சிறு வயதிலேயே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த தாய் சத்யா..சத்யாவின் தாய் சாந்தி.
கணவர் ராஜு மற்றும் அவருடைய தாய் மாரியம்மாள் மீது ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.