மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குடித்த கணவன்; தொடர்பை கைவிட மறுத்த காதலன் கொடூர கொலை...

Published : Aug 08, 2018, 12:27 PM IST
மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குடித்த கணவன்; தொடர்பை கைவிட மறுத்த காதலன் கொடூர கொலை...

சுருக்கம்

கிருஷ்ணகிரியில் மனைவியின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் மது அருந்தியுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ஃப்ராங்கிளின் அருள்தாஸ் (46). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிற்றி வருகிறார். இவரது மனைவி எலன் ஜாஸ்மின் (40). இவர் உனிசெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் வேலை செய்கிறார். இவருக்கு பேபி கிறிஸ்டியா (45) என்ற அக்காள் உள்ளார். இவரது கணவர் ரவிக்குமார் (50). இவர் தளிகும்பாரா என்னும் இடத்தில் வசிக்கின்றனர்.

பேபி கிறிஸ்டியா தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர், தங்கை எலன் ஜாஸ்மீன் வீட்டுக்கு அக்காள் பேபி கிறிஸ்டியா வந்திருந்தார். இந்த நிலையில் ரவிக்குமார் நேற்று முன்தினம் ஃப்ராங்கிளின் அருள்தாஸ் வீட்டுக்கு வந்தார். 

அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. இதில், ஃப்ராங்கிளின் அருள்தாஸ் தலையில் கல்லைப் போட்டு ரவிக்குமார் கொலை செய்தார். இதனையறிந்த காவலாளர்காள் ரவிக்குமாரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்  திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அந்த விசாரணையில், "எனது மனைவி பேபி கிறிஸ்டியா என்னுடன் கோபித்துக்கொண்டு ஃப்ராங்கிளின் அருள்தாஸ் வீட்டுக்குச் சென்றார். இதனால் ஃப்ராங்கிளின் அருள்தாஸ் சமாதானம் பேச என்னிடம் வந்தார். அப்போது இருவரும் ஒன்றாக மது அருந்தினோம். 

அப்போது போதையில் எனது மனைவியுடன் ஃப்ராங்கிளின் அருள்தாஸ் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை உளறினார். பின்னர், கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கூறினேன். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் அவர் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றேன்" என்று வாக்குமூலத்தில் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!