கணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை; போலீஸுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்த மனைவி உள்பட ஆறு பேர் மீது வழக்கு...

 
Published : Jan 12, 2018, 09:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
கணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை; போலீஸுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்த மனைவி உள்பட ஆறு பேர் மீது வழக்கு...

சுருக்கம்

Husband committed suicide Six people including the wife who burned the body without informing the police ...

விருதுநகர்

விருதுநகரில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டவரின் கணவரின் உடலை போலீஸுக்கு தெரிவிக்காமல் எரித்த மனைவி உள்பட ஆறு பேர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கட்டளைப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (54). இவர் கூலித் தொழிலாளி. இவர், கடந்த 9-ஆம் தேதி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர் நாகேந்திரன்,  வெடியான்  உள்ளிட்ட ஆறு பேர் பாஸ்கரனின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரித்து விட்டனர்.

பின்னர், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் , சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவரின் அனுமதி பெற்று மாரனேரி காவலாளர்கள் பாஸ்கரனின் மனைவி மாரியம்மாள் உள்பட ஆறு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆறு பேரிடமும் தனித்தனியே விசாரணை நடைப்பெற்று வருகின்றது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!