வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை கேட்ட மனைவியை அடித்தே கொன்ற கணவன் கைது...

 
Published : Nov 25, 2017, 08:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை கேட்ட மனைவியை  அடித்தே கொன்ற கணவன் கைது...

சுருக்கம்

Husband arrested for killing his wife

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை கேட்ட மனைவியை அடித்தே கொலை செய்த கணவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நல்லகுட்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவர் செங்கல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி இலட்சுமி (36). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஆறுமுகத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாகவும், அவர்கள் இருவரும் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் மனைவிக்கு தெரியவே, அவர்கள் இருவருக்கும் இதுகுறித்து அடிக்கடி வாய்த்  தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மறுபடியும் கணவன், மனைவி இடையே இதுகுறித்து சண்டை எழவே அது வெடித்தது. அப்போது, இலட்சுமியை சரமாரியாக அடித்த அவரது கணவர், மனைவி என்றும் பாராமல் தலைமுடியைப் பிடித்து வீட்டின் சுவற்றில் தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் இலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டுஆறுமுகத்தை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்
அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்