கெலமங்கலம் அருகே தறித்தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவி,. காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கெலமங்கலம் அருகே தறித்தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவி,. காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (35). வீட்டிலேயே தறி அமைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அம்பிகா (30), பெங்களூருவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
அம்பிகாவிற்கும், அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி (24) என்பவருக்கும் இடையே கடந்த 2 வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த மாதேஷ் மற்றும் அம்பிகாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அம்பிகா அவர்களின் அறிவுரையை கேட்காமல், ராமமூர்த்தியுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது மாதேஷ் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், அம்பிகாவின் ‘காதலன் ராமமூர்த்தி மற்றும் அவரது நண்பர் முரளி (24) ஆகியோர் சேர்ந்து, மாதேஷை கழுத்துறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.
போலீசில் ராமமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், அம்பிகாவிற்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. இதையறிந்த மாதேஷ, அம்பிகாவை கண்டித்தார். மாதேஷ் உயிருடன் இருக்கும் வரை, நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்பதால், அவரை கொலை செய்துவிடுமாறு அம்பிகா என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து, எனது நண்பருடன் சேர்ந்து மாதேஷை வீடு புகுந்து கழுத்தறுத்து கொலை செய்தேன் என தெரிவித்தார்.
ராமமூர்த்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதேஷ் மனைவி அம்பிகாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், காதலை கைவிடுமாறு கணவர் கண்டித்ததால், அந்த ஆத்திரத்தில் ராமமூர்த்தியிடம் கூறி மாதேஷை கொலை செய்ய கூறியதாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தேன்கனிக்கோட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.