இன்றைய வானிலை என்ன சொல்கிறது தெரியுமா?

 
Published : Nov 16, 2017, 02:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
இன்றைய வானிலை என்ன சொல்கிறது தெரியுமா?

சுருக்கம்

HOW THE RAIN WILL TODAY

வானிலை

தமிழகத்தில் கடந்த  ஒரு மாத  காலமாகவே  மழை பரவலாக  பெய்து வந்தது . இந்நிலையில்  இனி வரும் நாட்களில்  மழை படிப்படியாக  குறையும்  என  சென்னை  வானிலை  ஆய்வு அறிக்கை  தகவல்   தெரிவித்து இருந்தது 

அதன்படி, கடந்த  இரண்டு நாட்களாகவே  வெயிலின் தாக்கம்  அதிகரித்து  காணப் படுகிறது.இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 4 செ.மீ மழையும், பூண்டி, திண்டிவனம், கடலூர் பகுதியில் 3 செ.மீ மழையும் பெய்துள்ளதாக கூறியுள்ளது

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு