பணி நிரந்தரம் செய்ய வேண்டி மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம்…

 
Published : Oct 03, 2017, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
பணி நிரந்தரம் செய்ய வேண்டி மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் தீர்மானம்…

சுருக்கம்

Hospital Staff Association Decision Making ...

இராமநாதபுரம்

இரண்டு ஆண்டுகள் பணி முடித்திருக்கும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மருத்துவமனை பணியாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் சங்க மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத் தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமை  தாங்கினார்.

மாநிலத் தலைவர் எல்.ரெங்கநாதன்,  மாவட்டத் துணைத் தலைவர்  எம்.ஏ.குமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.குமார், சங்க மாவட்ட தலைவர் எம்.ஆறுமுகம்,  செயலாளர் கே.முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் “இரண்டு ஆண்டுகள் பணி முடித்திருக்கும் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

மாதம் தோறும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்,

சீருடைப்படி, சலவைப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!