சென்னை பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம்! கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வெடித்த போராட்டம்!

By manimegalai aFirst Published Dec 31, 2018, 3:40 PM IST
Highlights

சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்பட்டது தொடர்பாக சம்பந்தபட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்பட்டது தொடர்பாக சம்பந்தபட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கும் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே, மாங்காட்டைச் சேர்ந்த பெண் கீழ்ப்பாக்கம் மற்றும் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்றபோது அந்த நேரத்தில் பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் நேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் மாதர் சங்க மாநில தலைவர் பிரமிளா கூறியதாவது:

மாங்காட்டில் இருந்து ரத்தம் குறைவு காரணமாக சிகிச்சை எடுக்க வந்த பெண்ணிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய பிறகு எச்.ஐ.வி நோய் வந்துள்ளது. இதனை கண்டித்து போராட்டம் நடத்த விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர்.

மாங்காட்டை சேர்ந்த பெண்ணிற்கு எச்.ஐ.வி ஏற்பட்டதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!