இசக்கிமுத்துவின் இறப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை - இறப்பு சான்றிதழில் கையெழுத்திட தந்தை மறுப்பு...!

 
Published : Oct 25, 2017, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
 இசக்கிமுத்துவின் இறப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை - இறப்பு சான்றிதழில் கையெழுத்திட தந்தை மறுப்பு...!

சுருக்கம்

His father has refused to sign the death certificate of Ishikumudu.

இசக்கிமுத்துவின் இறப்பு சான்றிதழில் கையெழுத்திட அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர். 
கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வந்தார்.  

இந்நிலையில், உயிருக்கு போராடி வந்த இசக்கி முத்துவும் இன்று உயிரிழந்தார். இதையடுத்து   இசக்கிமுத்துவின் இறப்பு சான்றிதழில் கையெழுத்திட அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு