
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி வெக்கம் வேதனை கேவலம் என திரைப்பட இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் மெர்சலை பற்றி பேசாதவர்கள் யாருமே இருக்க முடியாது ....அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகும் அளவிற்கு இலவச ப்ரோமோஷன் செய்து கொடுத்தது பா.ஜ.க......
இந்நிலையில் படத்தின் வெற்றியை கண்டு மெர்சலான விஜயின் அப்பா
எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனியார் தொலைகாட்சியில் பேட்டி கொடுத்தார்.
அப்போது, தன் மகன் விஜய் பற்றி ஆஹா ஓஹோ என பேச தொடங்கினார்..இதனிடையே நெறியாளர், தமிழகத்தில் தற்போது உள்ள ஆட்சி எப்படி இருக்கு என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு "வெக்கம் வேதனை கேவலம்" என அப்படியே முகத்தை பல கோணங்களில் திருப்பி,டி.ராஜேந்தரின் ஸ்டைலில் தெரிவித்தார்
காரணம் :
மெர்சல் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்து சுமாராக ஓடியிருக்கவேண்டிய சாதாரணமான மசாலா படத்தை பிரச்சனை செய்து மெகா ஹிட் படமாக்கிக் கொடுத்ததில் பாஜகவிற்கு பெரும் பங்கு இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் "ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா" காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவற்றை நீக்க வேண்டும் என்று ஒட்டாரமாக ஓவராக ஆட்டம் போட்டனர் பாஜக முக்கிய தலைகள். இதுதான் சமயம் என்று மோடி ஆட்சியின் மீதான வெறுப்பில் இருந்த எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட நடிகர்கள் என ஒட்டுமொத்தமாக பாஜகவினர் குற்றசாட்டை வைத்தது.
தமிழிசைக்கும் திருமவளவனுக்கும் மெர்சலால் தொடங்கிய கருத்து மோதல் இப்போது தமிழிசையின் உருவ பொம்மையை எரிக்கும் அளவிற்கு போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் தான் நடுவுல சிந்து பாட தொடங்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திர சேகர்...கமல் வராரோ...ரஜினி வராரோ....தன் மகன் விஜய் அரசியலுக்கு வந்து... அப்படியே ஆட்சியை லபக்குனு பிடிக்கணும் என்பது போன்ற தாக்கத்தை நேரடியாகவே காண்பிக்கிறார் விஜய்யின் அப்பா...