6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியை தொடங்கும் போது மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு நேற்று மட்டும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்நாடு மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி ஊக்கதொகை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளன்று ஜூலை 15 ஆம் தேதி இத்திட்டத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதி உடைய மாணவிகளிடம் இருந்து சான்றிதழ்களை பெற அனைத்து கல்லூரிகளுக்கும் உயர் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிருந்தது.
மேலும் படிக்க:இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
இதனை தொடர்ந்து உயர்கல்வி ஊக்கத் தொகை பெறும் மாணவிகளின் பெயர் பட்டியலை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பெற தகுதி பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்களை http://studentsrepo.tn http://schools.gov.in என்ற இணையத்தள பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க:கவனத்திற்கு!! ஜூலை 7,8 ஆம் தேதியில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு.. யாருக்கெல்லாம் முன்னுரிமை..? முழு தகவல்.
இதனிடையே கடந்த 24 ஆம் தேதியன்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர் கல்வித்துறை வெளியிட்டது. அதில், இத்திட்டத்தின் தகுதியான மாணவிகளின் பெயரை பதிவு செய்ய அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பு முகாமை 25 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க:நாளை ஆனி மாத பிரதோஷம்.. சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு செல்ல அனுமதி..
அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் விவரங்களைப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று முதல் தொடங்கியது. மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள், மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.