நாளை 71வது சுதந்திர தினம் - தமிழகம் முழுதும் பலத்த பாதுகாப்பு...!!

 
Published : Aug 14, 2017, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
நாளை 71வது சுதந்திர தினம் - தமிழகம் முழுதும் பலத்த பாதுகாப்பு...!!

சுருக்கம்

high security alert for independence day

71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை, சுதந்திரதினத்தையொட்டி, சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றுகிறார்.

சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்கள் போலீஸ் வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடனும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்ட பிறகு, அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சென்னை, விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?
‘எமது கொள்கை தலைவர்’ பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்