ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!

ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!

Published : Apr 30, 2026, 07:02 PM IST

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வழக்கமாக ஏப்ரல் முதல் மே மாதம் வரை கோடை காலம் நிலவும். சில சமயங்களில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களிலேயே லேசான மழைப்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு, காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக போதிய மழையின்றி கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. வழக்கத்திற்கு மாறாக நிலவிய வெப்ப அலைகளால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், இன்று ஊட்டியில் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த இந்த மழையினால் வெப்பம் தணிந்து, ஊட்டிக்கே உரித்தான இதமான குளிர்ந்த காலநிலை திரும்பியுள்ளது. இதனால் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மலைப்பிரதேசத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், வறட்சியால் வாடிய உள்ளூர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நிலவும் இந்த குளுமையான சூழலை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அனுபவித்து வருகின்றனர்.

02:17School Student: பள்ளி கல்லூரி மாணவர்கள் ஹேப்பி நியூஸ்.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
04:57அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
04:50புதிய அரசுப் பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்!
02:43Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா?
04:02நான் எப்படி இருக்க வேண்டுமென தொகுதி மக்கள் விரும்புவதை நான் நிறைவேற்றுவேன் - விஜயபாஸ்கர்
03:33அவங்களுக்கு இன்னும் அந்த திமிர் போகல!" திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ்!
04:20TVK vs ADMK | விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.!
01:50TN Rain Aert : 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. மழை கொட்டப்போகுது.. மக்கள் கவனிக்க வேண்டிய அப்டேட்
02:50"முதலமைச்சர் விஜயை வீழ்த்த தமிழ்நாட்டில் எவனும் பிறக்கப்போவதுமில்லை! - செங்கோட்டையன் அதிரடி!
04:1247 MLA-வை வச்சுக்கிட்டு EPS முதல்வராக ஆசைப்பட்டாரா? வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! 💥