வேலூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை; 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேறோடு சாய்ந்தன...

First Published Jun 19, 2018, 7:01 AM IST
Highlights
heavy rain with hurricane in Vellore More than 5000 banana trees fell down


 

வேலூர்

வேலூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெளுத்து வாங்குகிறது. சில மாவட்டங்களில் லேசான மழையும், சில மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால்,  மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெய்யும் மழையால் சாலைகளைல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் நடைபயணிகள் கூட முகசுளிக்கின்றனர்.

இந்த  நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்களி பகுதியில் நேற்று முன்தினம் முதல் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த சூறாவளிக் காற்றால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.

மேலும், இந்தப் பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து சாய்ந்தன. சுமார் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேறோரு சாய்ந்ததால் விவசாயிகள் பெரும் கவலையில் அடைந்துள்ளனர். 

ஒருபக்கம் மழை பெய்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு தந்தாலும், மறுபக்கம் பயிரிட்ட வாழை மரங்கள் சாய்ந்ததை எண்ணி மக்கள் வேதனையில் உள்ளனர்.

click me!