வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 23 ஆம் தேதி வரை மிக கன மழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவுரைகளை வழங்கி எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழக அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக செய்யப்பட்டிருந்தது.
ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்
மிக கன மழை எச்சரிக்கை வாபஸ்
இந்தநிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிக கன மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்ப பெற்றுள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்பு இல்லாத காரணத்தால் மழைக்கான எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.. இருந்த போதும் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறை சார்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..? இரண்டு பேர் காயம்..! சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை