Heavy Rain Warning: போட்டு தாக்கும் வெயிலுக்கு இடையே குட் நியூஸ்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Published : Jun 07, 2026, 11:44 PM IST
tamilnadu rain

சுருக்கம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வானிலை மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜூன் 11ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. 

அதாவது தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

ஜூன் 10ம் தேதி

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஜூன் 11ம் தேதி

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி. மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலை நிலவரம்

இன்று முதல் ஜூன் 11 வரைதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் / சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். அதேபோல் இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK Vijay: 'ஸ்டாப் டிரக்ஸ்' முழக்கமும்! மறுபக்கம் மதுபான ஆலை அதிபர் என்ட்ரி? யார் இந்த சந்தீப் ஆனந்த்? விஜய் கட்சியில் வெடித்த சர்ச்சை!
Bhagyaraj: திருமணமான 2 ஆண்டுகளில் உயிரிழந்த பாக்யராஜின் முதல் மனைவி யார்? பலரும் அறியாத சோக கதை!