50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மழை…. 48 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் சாதனை

First Published Sep 2, 2017, 7:01 AM IST
Highlights
Heavy rain in tamilnadu at august month


தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழைபொழிவு இருந்துள்ளது  என தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்து வந்ததால், வேளாண்மை செய்யமுடியாமல் விவசாயிகள் வறுமையில் வாடினர். இந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவக்காற்று மழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலும், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் மழை ஓரளவுக்கு பெய்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்தில், அதிக மழை பொழிவு இருந்த மாதங்களில் இந்த ஆகஸ்ட் மாதமாகும் முதலிடத்தை பிடிக்கிறது.

அதுமட்டுமல்மலாமல்,  ஒட்டுமொத்தமாக 150 ஆண்டுகளுக்கு எடுத்துக்கொண்டால், அதிக மழை பொழிவு இருந்ததில் 8-வது ஆகஸ்ட் மாதமாகும்.

 கடந்த 1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 167.8மி.மீ மழை பெய்துள்ளது. அதன்பின், 50 ஆண்டுகளுக்கு பின் பெய்த அதிகபட்ச மழை இந்த ஆகஸ்ட் மாதத்தில் 161.8 மி.மீ பெய்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் பெய்த அதிகபட்சமாகும்.

அதேசமயம், கடந்த 150 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழையில் 8-வது இடத்தை இந்த ஆகஸ்ட் மாதம் பெறுகிறது.

திருவண்ணாமலை, சிவகங்கை, பெரம்பலூர்,  தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் நல்ல மழை பெய்துள்ளது.

மேலும், சென்னையை எடுத்துக்கொண்டால்,  கடந்த 200 ஆண்டுகளில் சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த 9-வது அதிகபட்ச மழையாகும்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான், கடந்த 200 ஆண்டு வரலாற்றிலேயே ஆகஸ்ட் மாதத்தில் பெய்த அதிகபட்சமாக மழையாகும். அப்போது,

368.9 மி.மீ மழை பதிவானது. அதன்பின், அந்த அளவை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

இதில் இந்த ஆண்டு 2017 ஆகஸ்ட் மாதத்தைப் பார்த்தால், கடந்த 200 ஆண்டுகளில் பெய்த மழையில் 9-வது இடத்தைப் பிடிக்கிறது. அதாவது கடந்த 1969ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் கடைசியாக, 259.4 மி.மீட்டர் மழை பெய்தது.

அதன்பின், 48ஆண்டுகளுக்கு பின், 257.5 மி.மீட்டர் மழை இந்த ஆண்டு ஆகஸ்டில் பதிவானது. இதில் இந்தஆண்டு ரெட்ஹில்ஸ் பகுதியில் 425 மிமீட்டர் மழை பதிவாகி சாதனை படைத்து இருக்கிறது.

அதுமட்டுல்லாமல், கடந்த 10ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழைப் பொழிவோடு ஒப்பிட்டு பார்த்தாலும், இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ததுதான் 2-வது அதிகபட்சமாகும்.

தமிழகத்தில் கடந்த 10ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை இந்த ஆகஸ்டில் பெய்த 161.8 மி.மீ அதிகபட்சமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

 

 

 

tags
click me!