உறுப்பு மாற்று சிகிச்சையில் எந்த முறைகேடும் இல்லை...! சுகாதார துறை செயலர் விளக்கம்

By manimegalai aFirst Published Oct 27, 2018, 3:22 PM IST
Highlights

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

உறுப்பு மாற்று சிகிச்சைகளில் வெளிநாட்டினர் மட்டுமே பயன் பெறுவதாக கூறுவது தவறு என்றும் 15 வகையான மாற்று அறுவை சிகிச்சைகளில் 13 உறுப்புகள் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை, கிண்டியில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் எந்த முறைகேடும் இல்லை என்றார்.

 

உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பாக எழுந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறினார். 15 வகையான மாற்று அறுவை சிகிச்சைகளில் 13 உறுப்புகள் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. 

 

தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள நோயாளிகளுக்கு பயன்படாத உறுப்புகள் மட்டுமே வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்றார். மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

click me!